Skip to main content
எவரெஸ்ட் மலையில் காணாமல் போன மலையேறி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எவரெஸ்ட் மலையில் காணாமல் போன மலையேறி - 6 நாளுக்குப் பின் உயிருடன் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
எவரெஸ்ட் மலையில் காணாமல் போன மலையேறி - 6 நாளுக்குப் பின் உயிருடன் கண்டுபிடிப்பு

(படம்: Envato Elements)

எவரெஸ்ட் மலையில் காணாமல்போன மலையேற்ற வழிகாட்டி 6 நாளுக்குப் பின் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நேப்பாளத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஹில்லரி டாவா ஷெர்ப்பா (Hillary Dawa Sherpa) சென்ற சனிக்கிழமை (30 மே) காணாமல் போனார்.

இன்று காலை அவர் அடிவார முகாமிற்கு அருகே காணப்பட்டதாகத் தேடல், மீட்பு முயற்சிகளை மேற்பார்வையிடும் நிறுவனம் தெரிவித்தது.

எவரெஸ்ட் மலையில் பாதைகளை அமைக்கவும் சுத்தம் செய்யவும் உதவும் குழு அவரைக் கண்டது.

காட்மாண்டு நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு செல்ல ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மலையேறி கிறிஸ் திரால் மே 29ஆம் தேதி ஷெர்ப்பாவுடன் மலை உச்சியை அடைந்ததாகக் கூறினார்.

கீழே இறங்கும்போது ஷெர்ப்பா ஓய்வெடுக்க அமர்ந்ததாகவும் தம்மை முதலில் போகச் சொன்னதாகவும் திரால் குறிப்பிட்டார்.

சிறிது தூரம் சென்றவுடன் போலந்தைச் சேர்ந்த ஒரு மலையேறியைக் கண்டதாக அவர் சொன்னார்.

அவருக்கு உதவி தேவைப்பட்டதால் ஷெர்ப்பாவைத் தேடிச் செல்லவில்லை என்று திரால் விளக்கம் அளித்தார்.

எவரெஸ்ட் மலையில் நிலைமை கடுமையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்