நேப்பாளம் - உயிருடன் கிடைப்பார்களா? பணி தொடர்கிறது
வாசிப்புநேரம் -
(படம்: CNS / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நேப்பாளம் - திபெத் எல்லையில் நேர்ந்த பெருவெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,100ஐக் கடந்துவிட்டது.
சுமார் 3,900 பேரை இன்னும் காணவில்லை.
திபெத்தில் 16 பேர் மாண்டனர். சுமார் 540 பேரைக் காணவில்லை என்று சீனா கூறுகிறது.
வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரமாகிறது.
காணாமல்போன அன்புக்குரியவர்கள் உயிருடன் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.
நேப்பாளத்தில் சில குடும்பங்கள் காணாமல்போனவர்களின் ஆன்மா அமைதியடைய இறுதிச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 1,000க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேப்பாளத்தில் மீட்புப் பணியாளர்கள் இன்னமும் நம்பிக்கையை இழக்கவில்லை.
நீர்மின் சுரங்கங்களில் உயிருடன் இருப்போரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கங்களைத் தோண்டத் தோண்ட உடல்கள் மட்டுமே கிடைக்கின்றன.
யாராவது உயிருடன் இருப்பர் என்ற நம்பிக்கையில் மீட்புக் குழுவினர் பணியைத் தொடர்கின்றனர்.

ஆதாரம் : AFP