Skip to main content
நேப்பாளப் பெருவெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாளப் பெருவெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியது

வாசிப்புநேரம் -
நேப்பாளப் பெருவெள்ளம்: மாண்டோர் எண்ணிக்கை 1000ஐத் தாண்டியது

படம்: AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 01 Sep 2026 07:29PM புதுப்பிப்பு : 01 Sep 2026 08:03PM
நேப்பாள-திபெத் எல்லையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் மாண்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

காணாமல் போன மேலும் 4,000க்கும் அதிகமானோரைத் தேடி, மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.

அவர்களில் சுமார் 600 பேர் வெளிநாட்டினர்.

காணாமல் போன 43 ஆஸ்திரேலியக் குடிமக்களில் ஒருவர் திபெத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே நேப்பாளத்தில் உள்ள நீர்மின் ஆலைக் கட்டுமானத் தளத்திலிருந்து கடந்த வாரம் மீட்கப்பட்ட ஒன்பது தென்கொரியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 11,000க்கும் அதிகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளதாக நேப்பாள அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்நாட்டில் பல்வேறு சுரங்கங்களில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான நீர்மின் ஆலை ஊழியர்களைக் காப்பாற்ற மீட்புப்பணியாளர்கள் போராடுகின்றனர்.

கனரகக் கருவிகளைக் கொண்டு அடர்த்தியான சேற்றையும் இடிபாடுகளையும் அகற்றி ஊழியர்களை வெளியே கொண்டுவர அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

உயிர்வாயு குறைந்துவரும் நிலையில் உயிருடன் யாரையும் மீட்பதற்கான வாய்ப்பு நாளுக்குநாள் குறையும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இவ்வேளையில் அனைத்துலகச் சமூகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிக்குப் பேரிடர் நிவாரணக் குழுவை அனுப்புவதாகத் தென்கொரியா தெரிவித்தது.

சீனா ஆளில்லா வானூர்திகள், தண்ணீர்ச் சுத்திகரிப்புச் சாதனங்கள் உட்பட இரண்டாவது தொகுதி நிவாரணப் பொருள்களை அனுப்புகிறது.

உடல்களை அடையாளங்காண மரபணுச் சோதனை நிபுணர் குழுவையும் அது அனுப்புகிறது.

பிணவறைகள் நிரம்பி வழிவதால் நிலைமையைச் சமாளிக்க நேப்பாளம் சுமார் 200 உடல்களை மொத்தமாக அடக்கம் செய்துள்ளது.

தற்காலிக நடவடிக்கையாக அவ்வாறு செய்யப்படுகிறது.

எதிர்காலத்தில் குடும்பங்கள் உடல்களை அடையாளங்காண உதவியாக மரபணு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நேப்பாளத்தில் 987 பேர் மாண்டனர்.

திபெத்தில் 16 பேர் பலியாகினர்.

திபெத்தில் மாண்டோருக்கு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், அவசரகாலக் குழுவினர் ஆகியோர் ஒரு நிமிட மௌனம் அனுசரித்து மரியாதை செலுத்தினர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்