Skip to main content
நேப்பாளச் சுரங்கத்திலிருந்து சீன நாட்டவர் உயிருடன் மீட்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாளச் சுரங்கத்திலிருந்து சீன நாட்டவர் உயிருடன் மீட்பு

வாசிப்புநேரம் -
நேப்பாளச் சுரங்கத்திலிருந்து சீன நாட்டவர் உயிருடன் மீட்பு

படம்: AFP/Handout via Nepal Army Facebook Page

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளத்தில் மீட்புப்பணியாளர்கள் சீன நாட்டவர் ஒருவரை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

பேரிடர் ஏற்பட்டு 10 நாள்களுக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டார்.

225 மீட்டர் ஆழத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார்.

திரிசூலி வட்டாரத்தில் அமைந்திருந்த Trishuli-1 நீர்மின் ஆலையின் சுரங்கத்தில் அவர் சிக்கியிருந்தார்.

நேற்று Trishuli-3A சுரங்கத்திலிருந்து இரண்டு நீர்மின் ஆலை ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். அந்த அதிசயத்துக்குப் பிறகு மீட்புப்பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

மீட்கப்பட்ட ஆடவர் தற்போது மருத்துவச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை பேர் மீட்கப்படலாம் என்று தெரியவில்லை.

நேப்பாளத்தில் இதுவரை 1,300க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனோரின் எண்ணிக்கை 5,000த்தைத் தாண்டியது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்