Skip to main content
நேப்பாளத்தில் மீண்டும் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நேப்பாளத்தில் மீண்டும் வெள்ளம் - பாதுகாப்பை நாடும் மக்கள்

வாசிப்புநேரம் -
நேப்பாளத்தில் மீண்டும் வெள்ளம் - பாதுகாப்பை நாடும் மக்கள்

(படம்: Prakash MATHEMA / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நேப்பாளத்தின் மத்திய பகுதியில் ஏற்பட்ட புதிய வெள்ளத்தால் பாதுகாப்பான இடக்களுக்குச் செல்லும்படி ஆற்றங்கரையோர மக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காத்மாண்டுவிலிருந்து (Kathmandu) சுமார் 100 கிலோமீட்டர் மேற்கே உள்ள கோர்க்கா (Gorkha) மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அது புத்ஹி கந்தகி (Budhi Gandaki) ஆற்றைத் தடுத்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 12 வீடுகள், இரண்டு தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கோர்க்காவையும் தாடிங் (Dhading) மாவட்டத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலைப் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

நிலச்சரிவு அபாயத்தில் இருந்த ஆறு பேரை ராணுவத்தினர் மீட்டனர்.

உயிரிழப்பு பற்றி இதுவரை தகவல் ஏதும் பதிவாகவில்லை.

கோர்க்கா உட்பட ஐந்து மாவட்டங்களில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலைமை வானூர்தி மூலமும் கண்காணிக்கப்படுகிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்