Skip to main content
தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறிய இஸ்ரேலியப் பிரதமர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறிய இஸ்ரேலியப் பிரதமர்

வாசிப்புநேரம் -
தேர்தலில் பெரும்பான்மை பெறத் தவறிய இஸ்ரேலியப் பிரதமர்

REUTERS/Ronen Zvulun

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 30 Oct 2026 10:25AM புதுப்பிப்பு : 30 Oct 2026 12:37PM

இஸ்ரேலியப் பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் (Benjamin Netanyahu) கூட்டணி பெரும்பான்மை பெறத் தவறியுள்ளது.

இறுதிக்கட்டத் தேர்தல் முடிவுகளில் அது தெரியவந்தது.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

தனிப் பெரும்பான்மை பெற ஒரு கட்சி 61 இடங்களில் வெல்லவேண்டும். 

திரு நெட்டன்யாஹுவின் கூட்டணி 53 இடங்களை வென்றது.

முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களை வென்றது.

அரபுக் கட்சிகள் 19 இடங்களை வென்றன.

இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க அரபுக் கட்சிகள் முக்கியமாக நாடப்படலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பொதுத்தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகத் திரு நெட்டன்யாஹு குற்றச்சாட்டியுள்ளார்.

அரபுக் கட்சிகள் இந்தத் தேர்தலைத் திருடிவிட்டதாகவும் வெளிநாட்டுத் தலையீடு இருந்ததா என்பதை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு விசாரிப்பதாகவும் அவர் கூறினார்.

கட்சிகள் கத்தார், துருக்கியே ஆகிய நாடுகளிடமிருந்து சட்டவிரோதமாக நிதியாதரவு பெற்றனவா என்று அரசாங்கம் புலனாய்வு செய்கிறது.

முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் அரபுக் கட்சித் தலைவர்களும் அதனைச் சாடியுள்ளனர்.

கத்தார் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்