Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

மலேசியாவின் புதிய 118 Mall – மின்படிக்கட்டு நின்றதால் இணையத்தில் விவாதம்

வாசிப்புநேரம் -
மலேசியாவின் புதிய 118 Mall – மின்படிக்கட்டு நின்றதால் இணையத்தில் விவாதம்

படம்: instagram/kiahinchina

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட 118 Mall கடைத்தொகுதியில் மின்படிக்கட்டு ஒன்று இயங்காமல் நின்றதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

கடைத்தொகுதி நவம்பர் முதல் தேதி திறக்கப்பட்டது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சில நாள்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேற்கூரையிலிருந்து நீர் வழிவது, காலியாக உள்ள கடையின் முன் பலகைகள் சரிந்து விழுவது எனப் பல பிரிச்சினைகள் கடைத்தொகுதியில் இருக்கும் காணொளிகளும் சமூக ஊடகத்தில் பரவி வருகின்றன.

கடைத்தொகுதி முழுமையாகத் தயாராகும் முன்பே திறக்கப்பட்டதா என்று சில இணையவாசிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கட்டுமானப் பணிகள் அவசரமாக முடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறினர்.

மின்படிக்கட்டு இவ்வளவு விரைவில் பழுதடைந்தது குறித்துச் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

உண்மையான காரணம் தெரியாமல் பராமரிப்பு ஊழியர்களைக் குறைகூறுவது சரியல்ல என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

மின்படிக்கட்டு நின்றதற்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

ஆதாரம் : Social Media Local

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்