புதுடில்லியில் கண்ணை மறைக்கும் புகைமூட்டம்

Arun SANKAR / AFP
இந்திய தலைநகர் புதுடில்லியில் மோசமான புகைமூட்டத்தால், சில இடங்களில் பார்க்கக்கூடிய தூரத்தின் அளவு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குக் குறைந்துள்ளது.
அதனால் அங்கு விமானச் சேவைகள் தடைப்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பனிக்காலம் தொடங்கியதிலிருந்து அங்குக் காற்றுத் தூய்மைக்கேடு மோசமாகியிருக்கிறது.
சுவிட்சர்லந்தைச் சேர்ந்த IQ Air குழுவின் தகவல்படி, இன்றைய காற்றுத் தூய்மைத் தரக்குறியீடு மிக மோசம் என்று வகைப்படுத்தப்பட்டது.
IndiGo, Spicejet ஆகிய இந்திய விமானச்சேவை நிறுவனங்கள் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருக்கின்றன.
புதுடில்லியில் சில ரயில் சேவைகளும் தாமதமாகின.