Skip to main content
புதுடில்லியில் பெரும் வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

புதுடில்லியில் பெரும் வெடிப்பு- 8 பேர் பலி; மும்பை, கொல்கத்தாவில் உயர் விழிப்புநிலை

வாசிப்புநேரம் -
புதுடில்லியில் மக்கள் புழக்கம் அதிகமுள்ள செங்கோட்டைப் (Red fort) பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 8 பேர் மாண்டனர்.

மேலும் 11 பேர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

செங்கோட்டை, பரபரப்பான வர்த்தக மையமான சாந்தினி சவுக்குக்கு (Chandni Chowk) அருகில் இருக்கிறது.

நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த இடங்கள் உள்ளூர் வாசிகள், வெளிநாட்டுப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றவை.

கார் வெடித்ததில் அதைச் சுற்றியிருந்த குறைந்தது 6 வாகனங்களும் 3 ஆட்டோ-ரிக்ஷாக்களும் தீப்பற்றின.

வெடிப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா போன்ற மற்ற பெரிய இந்திய நகரங்கள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்