கத்தோலிக்கத் தேவாலயம் உலகின் இருண்ட இரவுகளுக்கு ஒளியூட்டும்: போப் லியோ
வாசிப்புநேரம் -
படம்: Vatican Media via AP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
போப் லியோ கத்தோலிக்கத் தேவாலயம் உலகின் இருண்ட இரவுகளுக்கு ஒளியூட்டும் என்று நம்புவதாகக் கூறியிருக்கிறார்.
Michelangelo ஓவியங்களைக்கொண்ட Sistine தேவாலயத்தில் பேசிய அவர், முதலில் ஆங்கிலத்திலும் பிறகு இத்தாலிய மொழியிலும் பேசினார்.
கலிபோர்னியாவில் பிறந்த போப் லியோ, முதல் அமெரிக்க போப். 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர் உரையாற்றினார்.
தலைமைப் பேராயர்களின் சந்திப்பில், நவீன கத்தோலிக்க வரலாற்றில் ஆகக்குறைவான நேரத்தில், 26 மணிநேரத்துக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
132 தலைமைப் பேராயர்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர்.
69 வயது போப் லியோ 2023இல் தலைமைப் பேராயர்களின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் அவர் ரோமில் வசிக்கிறார்.

ஆதாரம் : Reuters