Skip to main content
உலகில் முதன்முதலில் புத்தாண்டை வரவேற்கும் இடம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகில் முதன்முதலில் புத்தாண்டை வரவேற்கும் இடம்?

வாசிப்புநேரம் -
உலகில் முதன்முதலில் புத்தாண்டை வரவேற்கும் இடம்?
வெளியீடு : 31 Dec 2025 04:31PM புதுப்பிப்பு : 31 Dec 2025 05:03PM
கடந்து போகின்றன 365 நாள்கள் ...

பிறக்கவிருக்கிறது புத்தாண்டு.

உலகில் முதன்முதலில் புத்தாண்டு கொண்டாடும் இடம் எது?

பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாஸ் (Kiribati) நாட்டின் கிறிஸ்துமஸ் (Kiritimati) தீவு!

அங்கு புத்தாண்டு பிறக்கும்போது சிங்கப்பூர் நேரம் 2025 டிசம்பர் 31 மாலை 6 மணி.

6.15 மணியிலிருந்து நியூசிலந்தின் வெவ்வேறு இடங்கள் புத்தாண்டை வரவேற்கும்.

8 மணிக்குப் பசிபிக் தீவுகளும் ரஷ்யாவும் கொண்டாட்டத்தில் திளைக்கும்.

9 மணியிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகள் கொண்டாடும்.

11 மணிக்கு ஜப்பானும்
தென் கொரியாவும் கொண்டாட்டத்தில் இணையும்.

மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளுக்குப் பிறகே சிங்கப்பூரில் 2026 புத்தாண்டு பிறக்கும்.

உலகம் முழுதும் புத்தாண்டை வரவேற்பதற்குள் 26 மணி நேரம் கடந்துவிடும்.

கிரிபாஸின் கிறிஸ்துமஸ் தீவில் ஜனவரி இரண்டாம் தேதியாகிவிடும்.

அப்போதுதான் ஹவாயி, அமெரிக்காவின் தீவுகள் சிலவற்றில் புத்தாண்டு வரும்.

 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்