Skip to main content
சரியும் கட்டடம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சரியும் கட்டடம் - நியூயார்க்கில் அமளி

வாசிப்புநேரம் -
சரியும் கட்டடம் - நியூயார்க்கில் அமளி

REUTERS/Jordan Tovin

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 37 மாடிக் கட்டடம் இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதன் அருகில் உள்ள பள்ளி உள்ளிட்ட மற்ற கட்டடங்களில் இருப்போர் வெளியேற்றப்பட்டனர்.

Pfizer மருந்தாக்க நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்த அந்த இடம் இப்போது குடியிருப்புக் கட்டடமாக மாற்றப்படுகிறது.

அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

கட்டடத்திலிருந்து செங்கற்கள் விழுவதாகத் தகவல் அறிந்தத் தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

Related article image
REUTERS/Jordan Tovin
Related article image
REUTERS/Jordan Tovin

21ஆவது, 22ஆவது மாடிகளின் தூண்கள் வளைந்து சில தளங்கள் சரிந்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதிகளில் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கட்டடம் இன்னும் ஆடிக்கொண்டே இருப்பதாக நியூயார்க் மேயர் ஸோரன் மம்தானி (Zohran Mamdani) கூறுகிறார்.

கட்டடத்தை நிலைப்படுத்தப் பொறியாளர்கள் போராடுகின்றனர்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்