நியூயார்க் பள்ளிகளில் generative AI பயன்படுத்த ஓராண்டுத் தடை
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Heather Khalifa
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரசாங்கப் பள்ளிகளில் தொடக்கநிலை, இடைநிலை மாணவர்கள் generative AI எனும் ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பும்போது தடை நடப்புக்கு வரும்.
அந்த நகரின் பள்ளிகளுக்கான விரிவான செயற்கை நுண்ணறிவுக் கொள்கையின் ஒரு பகுதி இது என்று மேயர் ஸோரான் மம்தானி (Zohran Mamdani) கூறினார்.
"மாணவர்கள் கற்றுக்கொள்வதற்கும் வளர்வதற்கும் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுவது அவசியம்," என்று திரு மம்தானி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எட்டாம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 600,000 பேருக்கு அந்தத் தடை பொருந்தும்.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சில நேரங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
ஆசிரியர்கள் பாடங்களைத் திட்டமிடுதல், வகுப்பு அட்டவணையைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
2022ஆம் ஆண்டு ChatGPT அறிமுகமானபோது, நியூயார்க் நகர அரசுப் பள்ளிகள் அதற்குத் தற்காலிகத் தடை விதித்திருந்தன.
பின்னர் அந்தக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது.

ஆதாரம் : CNA