Skip to main content
பாதிக் கோழிக்கு 40 டாலரா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

பாதிக் கோழிக்கு 40 டாலரா?

வாசிப்புநேரம் -
பாதிக் கோழிக்கு 40 டாலரா?

Unsplash/Angela Bailey

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நியூயார்க்கில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள “ஜிகிஸ்”(Gigi's) உணவகம் அதன் விலைகளால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

புரூக்ளின் (Brooklyn) பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில், சுட்ட அரைக் கோழியின் விலை 40 டாலர்.

உயர்வான விலைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் அந்த முடிவைத் தற்காத்துப் பேசியுள்ளார், உணவக உரிமையாளர் ஹியூகோ ஹிவெர்னாட் (Hugo Hivernat).

வாழ்க்கைச் செலவினமே இதற்குக் காரணம் என அவர் கூறுகிறார்.

தரமான கோழி உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கே வருமானத்தில் சுமார் 25 விழுக்காடு செலவாகிறது என ஹியூகோ விளக்குகிறார்.

மீதமுள்ள தொகை, வாடகை, மின்சாரம், ஊழியர்களின் சம்பளம், செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவற்றுக்குச் செல்கிறது.

உணவகத்தைத் தொடங்க எடுக்கப்பட்ட சுமார் அரை மில்லியன் டாலர் கடனையும் அதிலிருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக அவர் சொன்னார்.

இந்தச் சூழலில், லாபம் ஈட்டுவதற்குப் பதிலாகச் செலவுகளைச் சமாளிப்பதே முக்கிய சவாலாக அமைகிறது.

அமெரிக்கா முழுவதும் வாழ்க்கைச் செலவினம் ஒரு கவலையாகவே உள்ளது என்பதை இது காட்டுகிறது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்