நியூயார்க் கட்டடம் ஆட்டம் - ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
வாசிப்புநேரம் -
(படம்: SPENCER PLATT / GETTY IMAGES NORTH AMERICA / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
நியூயார்க்கில் ஆட்டம்கண்ட கட்டடம் தற்போது நிலையாக இருப்பதாக நகர மேயர் ஸோரன் மம்தானி (Zohran Mamdani) தெரிவித்துள்ளார்.
அந்த 37 மாடிக் கட்டடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டதால் அதைச் சுற்றியிருந்த ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களையும் ஊழியர்களையும் வெளியேற்ற வேண்டியிருந்தது.
நேற்று (8 ஜூலை) காலையிலிருந்து கட்டடம் அசையவில்லை என்றும் அது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் திரு மம்தானி கூறினார்.
அந்தக் கட்டடத்தில் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
கட்டடத்தின் இரு தூண்கள் வளைந்ததாகவும் சில மாடிகள் சரிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கட்டடம் இடிந்து விழுந்துவிடும் என்ற அச்சத்தில் அருகில் இருந்த ஹோட்டல், கடைகள், வீடுகளில் இருந்தோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
கட்டடத்தில் அவசரப் பணிகள் நடைபெறுகின்றன.
முன்பு அங்கு Pfizer நிறுவனத்தின் தலைமையகம் செயல்பட்டது.
தற்போது அது குடியிருப்புக் கட்டடமாக மாற்றப்படுகிறது.
அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் கட்டும் பணிகள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : AFP