Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சமூக அளவில் Omicron பரவினால் நியூஸிலந்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் நடப்புக்கு வரலாம்...

வாசிப்புநேரம் -

நியூஸிலந்தில் சமூக அளவில் ஓமக்ரான் வகைக் கிருமி பரவினால், அந்நாட்டில் கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

எனினும் இப்போதைக்கு முடக்கநிலைக்குத் திரும்பும் திட்டம் இல்லை என்று அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) கூறினார். 

ஓமக்ரான் கிருமி வகையை ஒரு சிக்கலான எதிரி என்று அவர் வருணித்தார். 

அந்தக் கிருமி தொடர்ந்து மாறிக் கொண்டே  இருப்பதால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொன்னார். 

நியூஸிலந்தில் மேலும் குறைந்தது இருவருக்கு ஓமக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. 

அந்நாட்டில் இதுவரை மொத்தம் 400 பேருக்கு ஓமக்ரான் இருப்பது தெரிய வந்துள்ளது. 

நியூஸிலந்து அரசாங்கம் வெளிநாட்டில் இருக்கும் குடிமக்களும் விசா வைத்திருப்பவர்களும் நாட்டுக்குள் வருவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்