Skip to main content
2 வயதுச் சிறுமியைப் பயணப் பெட்டிக்குள் வைத்திருந்த பெண் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

2 வயதுச் சிறுமியைப் பயணப் பெட்டிக்குள் வைத்திருந்த பெண் கைது

வாசிப்புநேரம் -
2 வயதுச் சிறுமியைப் பயணப் பெட்டிக்குள் வைத்திருந்த பெண் கைது

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நியூசிலந்தில் 2 வயதுச் சிறுமியைப் பயணப் பெட்டிக்குள் வைத்து பேருந்தில் பயணம் செய்தப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிறுமியைத் துன்புறுத்தி அலட்சியப்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பேருந்தில் அந்தப் பெண் வைத்திருந்த பயணப் பெட்டி நகர்வதைக் கண்ட ஓட்டுநர் உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

ஓட்டுநர் பெட்டியைத் திறந்தபோது அதில் சிறுமியைக் கண்டார். சிறுமி அதிகச் சூட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் உடலில் வேறு காயங்கள் இல்லை.

சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கைதான அந்த 27 வயதுப் பெண் மீது மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

நியூசிலந்தின் சிறார்நல அமைச்சுக்குச் சம்பவம் பற்றி தகவல் தரப்பட்டுள்ளது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்