Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலின் பொக்கிஷம் பெலேயின் சார்பாக "வரலாற்றின் சிறந்த விளையாட்டாளர்" விருதைப் பெற்ற நேமார்...

வாசிப்புநேரம் -
பிரேசிலின் பொக்கிஷம் பெலேயின் சார்பாக "வரலாற்றின் சிறந்த விளையாட்டாளர்" விருதைப் பெற்ற நேமார்...

Instagram/Neymar

நேற்று முன்தினம் (24 டிசம்பர்) பிரேசிலின் பொக்கிஷம் பெலேயின் சார்பாகக் காற்பந்து வீரர் நேமார் வரலாற்றின் சிறந்த விளையாட்டாளருக்கான விருதைப் (Player of the History) பெற்றார்.

"இன்று மனத்திற்கு மிகவும் நெருக்கமான நாள். பெலேயைக் கௌரவிப்பதற்காக Budweiser விழாவில் விருது வழங்கப்பட்டது. அவர் சார்பாக அதைப் பெற்றுக் கொண்டதில் பெருமிதம் அடைகிறேன்," என்று தமது Instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் பெலேக்கு மரியாதை செலுத்தும் வகையில் Instagramஇல் பதிவிட்டார் நேமார். காற்பந்து உலகில் முத்திரை பதித்த பெலேயின் அருமை பெருமைகளை அதில் எடுத்துக் கூறியுள்ளார்.

தற்போது சாவ் பாவ்லோ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பெலே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்