Skip to main content
நெய்மார் ஓய்வு பெறுவாரா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நெய்மார் ஓய்வு பெறுவாரா?

வாசிப்புநேரம் -

பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார் (Neymar) இவ்வாண்டு இறுதிக்குள் ஓய்வுபெறக்கூடும். 

34 வயது நெய்மார் சென்ற மாத இறுதியில் சண்டோஸ் (Santos) அணியுடன் தம்முடைய ஒப்பந்தத்தை நீட்டித்தார்.

இருப்பினும் தம்முடைய வருங்காலம் குறித்து அவர் ஐயங்களைத் தெரிவித்துள்ளார்.

"இனி என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. டிசம்பர் வரும்போது நான் ஓய்வுபெற விரும்பலாம்," என்றார் நெய்மார்.

கடந்த சில காற்பந்துப் போட்டிகளில் அவர் அவ்வப்போது காயமடைந்ததுண்டு.

அண்மையில் மூட்டு அறுவைச் சிகிச்சையையும் அவர் மேற்கொண்டார்.

நெய்மார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் உடலுரத்துடன் இருப்பவர்களை மட்டும்   அனுமதிக்கவிருப்பதாக பிரேசில் தேசியக் காற்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கார்லோ என்சலோட்டி (Carlo Ancelotti) கூறினார்.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்