நைஜீரியாவில் அதிகரிக்கும் செலவினம்... சிறிய அளவுகளில் பொருள்களை வாங்கும் மக்கள்

AFP
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ளது. அதனைச் சமாளிக்க வித்தியாசமான வழியைப் பின்பற்றுகின்றனர் பலர்.
மக்கள், தேவையானவற்றை மிகச் சிறிய அளவுகளில் வாங்குகின்றனர். சமையல் எண்ணெய், பற்பசை, சர்க்கரை, காப்பித்தூள் போன்றவற்றைச் சிறிய பிளாஸ்டிப் பைகளில் குறைந்த விலைக்கு அவர்கள் பெறுகின்றனர்.
நைஜீரியர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாடம் 2 டாலருக்கும் குறைவாகவே செலவு செய்கின்றனர். அதனால் சிறிய அளவுகளிலேயே அத்தியாவசியப் பொருள்களை அவர்கள் வாங்குகின்றனர்.
அங்குள்ள மளிகைக் கடைகள் சிலவற்றில் அனைத்துப் பொருள்களும் சிறிய பிளாஸ்டிக் பொட்டலங்களில் விற்கப்படுகின்றன.
அத்தகைய கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளுக்குத் தேவையான பொருள்களை மட்டும் சிறிய அளவுகளில் வாங்குவதாக நம்பப்படுகிறது.
கொசுக்களை அண்டவிடாமல் தடுக்க உதவும் பசைகூட அங்கு மிகச் சிறிய பொட்டலங்களில் விற்கப்படுகிறது!
-AFP