ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மற்றொரு நிறுவனம்... Nike

(கோப்புப் படம்: Stephanie Keith/Getty Images/AFP)
Nike நிறுவனம், ரஷ்யச் சந்தையிலிருந்து நிரந்தரமாக வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததை அடுத்து, ரஷ்யாவில் உள்ள கடைகளைத் தற்காலிகமாக Nike மூடியது.
தற்போது அந்தக் கடைகளை மீண்டும் திறக்கப்போவதில்லை என்று அது கூறியுள்ளது.
இனிமேல் Nike இணையத்தளத்தையும் செயலியையும் ரஷ்யாவில் பயன்படுத்த முடியாது என்றும் அது குறிப்பிட்டது.
சென்ற மாதம், ரஷ்ய வர்த்தகர்களுடனான உரிம ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கப்போவதில்லை என்று Nike கூறியிருந்தது.
ரஷ்யாவிலிருந்து வெளியேறிய Starbucks, McDonald's ஆகிய நிறுவனங்களின் வரிசையில் Nikeயும் சேர்ந்துள்ளது.
-AFP