உலகம் exclusive
ஜொகூர் பாரு நிலா உணவகத் தீச்சம்பவம்: தீபாவளிப் பொருள்கள் எரிந்தன; யாருக்கும் காயமில்லை
வாசிப்புநேரம் -
படம்: லொவிஷீனா
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜொகூர் பாருவிலுள்ள நிலா உணவகத்திலும் அதற்குப் பக்கத்திலிருக்கும் மைதிலி கடையிலும் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
ஸ்ரீ ராஜமாரியம்மன் தேவஸ்தானத்திற்கு முன்புறம் உள்ள நிலா உணவகத்தில் காலை 7 மணியளவில் தீ பரவத் தொடங்கியது.
முதலில் உணவகத்தில் ஏற்பட்ட தீ அரை மணி நேரத்தில் பக்கத்துக்குக் கடைக்கும் பரவியது.
யாருக்கும் காயமில்லை.....
அதிகாலையில் உணவகத்தைத் திறக்கும் நேரத்தில் தீ பரவியதில் உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியேறிவிட்டனர்.
இதனால் ஊழியர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்தின் போது 5 பணியாளர்கள் கடையைத் திறக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக உணவகத்தைச் சேர்ந்த ருகேந்திரன் 'செய்தி'யிடம் சொன்னார்.
கடையில் உணவு அடுக்கி வைக்கும் போது கருகும் வாடை வந்ததாகவும் சிறிது நேரத்தில் கடையில் தீப்பற்றத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
பல முயற்சிகள் செய்தும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார் அவர்.
மின்சாரக் கோளாற்றினால் தீ பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த உணவகம் அமைந்திருக்கும் கட்டடம் 50 ஆண்டு பழைமையானது. நிலா உணவகம் இங்கு 30 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது.
சிங்கப்பூரர்கள் மத்தியில் பிரபலமான இந்த இரண்டுமாடி உணவகம் கடந்த ஆண்டு மத்தியில்தான் 300,000 ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டது.
தகிக்கும் அனல்.......
தீச்சம்பவம் பற்றித் தீயணைப்புத் துறைக்குக் காலை 7.28 மணிக்குத் தகவல் கிடைத்தது.
அடுத்த ஏழே நிமிடங்களில் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன.
தீயைக் கட்டுப்படுத்த அதிகளவு நீர் தேவைப்படும் என்பதால் கூடுதல் தண்ணீர்க் கலன்களையும் தீயணைப்பு வீரர்கள் கொண்டுவந்தனர்.
நண்பகல் 12 மணி நிலவரப்படி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் தகிக்கும் அனல் கடுமையாக இருந்தது.
கடைகளின் உரிமையாளர்களையும் ஊழியர்களில் சிலரையும் சம்பவ இடத்தில் காண முடிந்தது.
பிற்பகல் 3.30 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டுக் கடைக்கு நேற்றுத்தான் பெருமளவில் புதிய பொருள்கள் வந்து சேர்ந்ததாக மைதிலி கடை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
அந்தப் பொருள்களின் மதிப்பு 150,000 ரிங்கிட் என்று அவர் சொன்னார்.