இங்கிலாந்துக் காற்பந்து அணி முகாமுக்கு அருகே துப்பாக்கிச்சூடு - 9 பேர் காயம்
படம்: Reuters
அமெரிக்காவில் இங்கிலாந்துக் காற்பந்து அணியின் முகாமுக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது.
மிஸோரி (Missouri) மாநிலத்தின் கான்சஸ் சிட்டியில் இங்கிலாந்து அணியின் முகாம் அமைந்திருக்கிறது.
அதிலிருந்து சுமார் 6.4 கிலோமீட்டர் தூரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
9 பேருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. யாரும் உயிரிழக்கவில்லை.
இங்கிலாந்து அணி இன்னும் முகாமுக்குச் செல்லவில்லை. ஜூன் 10ஆம் தேதி அது கோஸ்ட்டா ரிக்கா அணியுடன் நட்பார்ந்த ஆட்டத்தில் பொருதவிருக்கிறது. அந்தப் போட்டி புளோரிடா மாநிலத்தில் நடக்கவிருக்கிறது.
இங்கிலாந்தின் காற்பந்துச் சங்கம் சம்பவம் குறித்து ஒன்றும் கூறவில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை வழக்கமான ஒன்று. சென்ற ஆண்டு 400க்கும் அதிகமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்தன.