Skip to main content
நிப்பா வைரஸ் பெயர் எப்படி வந்தது?எங்கு முதலில் பரவியது?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நிப்பா வைரஸ் பெயர் எப்படி வந்தது?எங்கு முதலில் பரவியது?

வாசிப்புநேரம் -
நிப்பா வைரஸ் பெயர் எப்படி வந்தது?எங்கு முதலில் பரவியது?
வெளியீடு : 29 Jan 2026 09:00PM புதுப்பிப்பு : 30 Jan 2026 10:30AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நிப்பா வைரஸ்...

இது முதலில் 1998ஆம் ஆண்டு மலேசியாவில் பரவியது.

அந்த இடத்தின் பெயர் கம்போங் சுங்கை நிப்பா (Kampung Sungai Nipah) என்பதால் வைரஸுக்கு நிப்பா என்று பெயரிடப்பட்டது.

மலேசியாவில் முதலில் பன்றிப் பண்ணையில் அடையாளம் காணப்பட்டது.

அங்கிருந்து மனிதர்களுக்குப் பரவியது; சுமார் 180 பேர் பாதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூருக்கும் பரவியது; 11 சம்பவங்கள் பதிவாகின.

பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் மலேசியாவில் வைரஸ் பாதித்த பன்றிகளை கையாண்ட இறைச்சித் தொழிற்சாலை ஊழியர்கள்.

அதன் பிறகு இரு நாடுகளிலும் புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

ஆகக் கடைசியாக நிப்பா வைரஸ் தொற்றியதாக இரு சம்பவங்கள் இந்தியாவின் மேற்கு வங்காள (West Bengal) மாநிலத்தில் பதிவாகியிருக்கிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக ஆசியாவிலுள்ள சில நாடுகள் விமான நிலையங்களில் பயணிகளைச் சோதிக்கின்றன.

சிங்கப்பூரும் சோதனைகளை மேற்கொள்கிறது. நிப்பா - இது என்ன வைரஸ்?

📍 விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது

📍 மாசடைந்த உணவிலிருந்தும் பரவலாம்.

📍 மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் நேரடியாகப் பரவும் வாய்ப்பு உண்டு.

📍 இது பழ வௌவால்களிடமிருந்து (Fruit bats) பரவுவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

📍 இந்த வைரஸால் ஏற்படும் மரண விகிதம் 40 முதல் 75 விழுக்காடு வரை

📍 சுவாசக் கோளாறு, மூளை வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்