Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டுகிறது: வட கொரியா

வாசிப்புநேரம் -
அமெரிக்கா வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டுகிறது: வட கொரியா

(படம்: AFP)

அமெரிக்கா வேண்டுமென்றே பதற்றத்தைத் தூண்டுவதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

இந்த வாரத் தொடக்கத்தில் அதிநவீன ஏவுகைணைச் சோதனை நடத்தியதால், வட கொரியாவின் முக்கியமான ஐவர் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்தது. 

வட கொரியாவின் புவியீர்ப்பு ஏவுகணை தொடர்பான திட்டங்கள், பேரழிவு ஆயுதங்களுக்கான மூலப் பொருள் கொள்முதல் ஆகியவற்றில் அந்த ஐவருக்கும் பொறுப்பிருப்பதாக அமெரிக்க நிதியமைச்சு தெரிவித்தது.  

தற்காப்புக்காக, சோதனைகளை நடத்தத் தனக்கு உரிமை உண்டு என்கிறது வட கொரியா. 

புதிய ஆயுதம் நாட்டின் தற்காப்பு ஆற்றலை மேம்படுத்துவதன் ஓர் அங்கம் என்று, வட கொரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. 

அமெரிக்கா, தனது பகைமைப் போக்கைத் தொடர்ந்தால், வலுவான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா எச்சரித்தது. 

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa