விமானத்தில் குளிர்சாதனம் இல்லாமல் தவித்த பயணிகள்

Tiktok/brigchicago
விமானத்தில் பொதுவாக குளிர்தான் அதிகமாக இருக்கும்...
அமெரிக்க விமானமொன்றில் பயணிகள் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் தவித்தனர்.
Tiktok தளத்தில் பகிரப்பட்ட காணொளியில் பயணிகள் பலர் விசிறிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.
சம்பவம் எங்கு நேர்ந்தது...எந்த விமானத்தில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
கடந்த மாதம் 24ஆம் தேதி, brigchicago எனும் கணக்கில் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் குளிர்சாதனம் வேலை செய்யவில்லை என்றும் வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது என்றும் ஒரு பெண் கூறுகிறார்.
வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அமைதி காக்கும்படி விமானச் சிப்பந்தி கூறியதாகவும் பெண் சொல்கிறார்.
காணொளியைக் கண்ட இணையவாசிகள் சிலர் சிப்பந்தியைச் சாடினர்.
சிலரோ சூட்டை எண்ணிக் கருத்துரைத்தனர்.
"இது நரகத்துக்குச் சமம்,"
"நான் வழக்கமாக அமைதியாக இருப்பேன். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பீதியடைந்திருப்பேன்," என்று சிலர் கூறினர்.