Skip to main content
இஸ்ரேலுடன் சண்டைநிறுத்த ஒப்பந்தம் செய்யவில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இஸ்ரேலுடன் சண்டைநிறுத்த ஒப்பந்தம் செய்யவில்லை - ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி

வாசிப்புநேரம் -
இஸ்ரேலுடன் சண்டைநிறுத்த ஒப்பந்தம் செய்யவில்லை - ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி

(படம்: Sergei KARPUKHIN / POOL / AFP)

ஈரான் இஸ்ரேலுடன் சண்டைநிறுத்த ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) கூறியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பாக இஸ்ரேலியப் படைகள் அவற்றின் தாக்குதல்களைக் கைவிட்டால் மேற்கொண்டு தாக்குதல் நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்று அவர் சொன்னார்.

தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பிறகே ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஈரான் முடிவெடுக்கும் என்று திரு அப்பாஸ் தெரிவித்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்