VEP அனுமதி அட்டை கட்டாயம் - அதில் மாற்றமில்லை: மலேசிய அமைச்சர் ஆன்ட்டனி லோக்
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Zamzahuri Abas)
மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு VEP அனுமதி அட்டை கிடைப்பதை உறுதிசெய்ய மலேசிய அரசாங்கம் உதவும்.
ஆனால் எக்காரணத்துக்காகவும் ஆகஸ்ட் முதல் தேதி VEP அனுமதி அட்டை கட்டாயம் இருக்கவேண்டும் என்ற முடிவில் மலேசிய அரசாங்கம் பின்வாங்காது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆன்ட்டனி லோக் (Anthony Loke) அவ்வாறு கூறியுள்ளார்.
சாலைப் போக்குவரத்துக் குற்றங்கள் புரியும் அல்லது அபராதங்கள் விதிக்கப்பட்ட வெளிநாட்டு வாகனங்களை அடையாளம் காண இப்போதைக்கு வேறு வழியில்லை என்றார் அமைச்சர்.
VEP நடைமுறை அமலுக்கு வந்ததும் மலேசியாவில் சாலை விதிமுறைகளை மீறிய வாகனமோட்டிகள் அபராதத்தைச் செலுத்திய பின்னரே நாட்டிலிருந்து வெளியேற முடியும் என்றார் திரு லோக்.
VEP அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது சில வாகனமோட்டிகள் சிரமத்தை எதிர்நோக்குவதை அமைச்சு அறிந்துள்ளது.
அந்தச் சிரமங்களைக் கண்டறிந்து அவற்றை எளிதாக்க அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
VEP கட்டாயமாக்கப்பட்ட பிறகு அந்த அனுமதி அட்டையின்றி மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்கு 2,000 ரிங்கிட் (575 வெள்ளி) அபராதம் அல்லது அதிகபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Bernama