தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பிரஞ்சுப் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்க ஜோக்கோவிச்சுக்கு அனுமதி இல்லை
படம்: William WEST / AFP
முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் பிரஞ்சுப் பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்படும் என பிரான்ஸின் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் புதிய சட்டத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.
கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் ஜோக்கோவிச், அண்மையில் ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
பயண விசா ரத்து செய்யப்பட்டு அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.