Skip to main content
"அதிபர் டிரம்ப் நொபெல் பரிசை மற்றவரிடமிருந்து வாங்க முடியாது"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"அதிபர் டிரம்ப் நொபெல் பரிசை மற்றவரிடமிருந்து வாங்க முடியாது"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நொபெல் அமைதிப் பரிசுப் பெற்ற ஒருவர் அதை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது என்று பரிசுக் கழகம் தெரிவித்துள்ளது.

வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கோரினா மச்சாடோவுக்குச் (María Corina Machado) சென்ற ஆண்டுக்கான நொபெல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. அவர் அதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு மாற்றிக் கொடுக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.

பரிசுக் குழுவின் முடிவு இறுதியானது. நிரந்தரமானது என்று நொபெல் பரிசுக் கழகம் தெரிவித்தது.

பரிசு பெற்றவரின் சொல் அல்லது செயல் பற்றி கருத்துத் தெரிவிப்பதில்லை என்றும் அது கூறியது.

திருவாட்டி மச்சாடோ நொபெல் பரிசை விட்டுக்கொடுத்தால் அதைப் பெறுவது கௌரவம் என்று திரு டிரம்ப் கூறியிருந்தார்.

அமைதிப் பரிசைப் பெற்றவருக்கே எப்போதும் அது சொந்தம் என்று நொபெல் குழு தெளிவுபடுத்தியது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்