16 ஆண்டுக்குப் பிறகு கைக்கு வந்த கைத்தொலைபேசிகள்
This audio is generated by an AI tool.
வாங்கிய பொருளைப் பெற சில நாள் அல்லது சில வாரம்வரை தாமதமாகலாம். ஆனால் ஒரு கடைக்காரர்வாங்கிய நோக்கியா கைத்தொலைபேசிகள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை வந்து சேர்ந்திருக்கின்றன. அது மட்டுமா? கடைக்காரரும் கைத்தொலைபேசிகளை விற்றவரும் ஒரே நகரத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு இடையே சில கிலோமீட்டர் தூரம் மட்டுமே என்றாலும் ஏன் அந்தத் தாமதம்? 2011ஆம் ஆண்டு லிப்யாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது; அதில் கட்டுமானங்கள் சேதமாகின. கைத்தொலைபேசிகள் கிடங்குகளில் கைவிடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கைத்தொலைபேசிகள் இருந்த பெட்டியைத் திறந்தபோது
கடைக்காரரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அந்தக் காட்சியைப் பார்த்து ரசித்த இணையவாசிகள் அவர்களது கருத்துகளைப் பதிவிட்டனர். போர் சூழல் அன்றாட வாழ்வை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதை உணர்வதாகப் பலர் கூறினர். மறுபுறம் நோக்கியா தொலைபேசிகள் தற்போது அரிதானவை; அவற்றை விற்று அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்றனர் சிலர்.