Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு வாரத்தில் நான்காம் முறையாக ஏவுகணையைப் பாய்ச்சியது வடகொரியா

வாசிப்புநேரம் -
வடகொரியா குறுகிய தூரம் செல்லும் புவியீர்ப்பு ஏவுணையைப் பாய்ச்சியிருப்பதாகத் தென்கொரியா தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்தில் வடகொரியா நான்காம் முறையாக ஏவுகணையைப் பாய்ச்சியிருப்பதாகச் சொன்னது தென்கொரிய ராணுவம்.

இந்நிலையில் வடகொரியாவிடமிருந்து வரும் ராணுவ, அணுவாயுத மிரட்டல்களை எதிர்கொள்ள சோலும் வாஷிங்டனும் அவற்றின் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றன.

அமெரிக்காவும் தென்கொரியாவும் தற்போது 11 நாள் ஒருங்கிணைந்த ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

அத்தகைய பயிற்சிகளைப் படையெடுப்புக்கான ஒத்திகையாகக் கருதும் வடகொரியா, அதற்கான கடுமையான பதில்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பலமுறை எச்சரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்