"நேட்டோ கூட்டணியின் கோரிக்கை நியாயமற்றது"
(கோப்புப் படம்: Reuters)
This audio is generated by an AI tool.
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தனது நியாயமான இறையாண்மை உரிமையை அச்சுறுத்தலாய்ச் சித்திரிப்பதாக வட கொரியா குறைகூறியுள்ளது.
துருக்கியேவில் நடைபெற்ற நேட்டோ உச்சநிலைச் சந்திப்புக்குப் பிறகு வடகொரியா அவ்வாறு கூறியது.
அமெரிக்காவின் கூட்டணி நாடுகளிடமிருந்தே அணுவாயுத ஒழிப்பைத் தொடங்க வேண்டும் என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வடகொரியா தனது அணுவாயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அது கூறியுள்ளது.
நேட்டோ, ராணுவக் கூட்டணியை வலுப்படுத்தி அதன் ஆயுதச் செலவை அதிகரிக்கிறது என்று வடகொரியா விமர்சித்துள்ளது.
ஆசிய-பசிபிக் நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை நேட்டோ விரிவுபடுத்துவதையும் அது கண்டித்துள்ளது.
நேட்டோ மாநாட்டில், 50 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டன.