Skip to main content
தென் கொரியாவுடன் சர்ச்சை: ஏவுகணையைப் பாய்ச்சிய வட கொரியா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென் கொரியாவுடன் சர்ச்சை: ஏவுகணையைப் பாய்ச்சிய வட கொரியா

வாசிப்புநேரம் -
தென் கொரியாவுடன் சர்ச்சை: ஏவுகணையைப் பாய்ச்சிய வட கொரியா

படம்: Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வட கொரியா கிழக்குக் கடலை நோக்கிக் குறைந்தது ஒரு புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சியிருப்பதாகத் தென் கொரியா கூறியுள்ளது.

வொன்சான் (Wonsan) பகுதியிலிருந்து அது பாய்ச்சப்பட்டதாகவும் ஜப்பானின் சிறப்புப் பொருளாதார வட்டாரத்துக்கு வெளியே விழுந்ததாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.

வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே உள்ள ராணுவமற்ற பகுதியில் பதிக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளால் தென் கொரிய வீரர்கள் காயமடைந்தனர்.

அதற்குப் பியோங்யாங் (Pyongyang) மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று சோல் (Seoul) கூறியது.

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் (Kim Jong Un)சகோதரி கிம் யோ ஜொங் (Kim Yo Jong) அதனை நிராகரித்தார்.

அதையடுத்து அண்மை ஏவுகணைச் சோதனை நடந்துள்ளது.

ராணுவ எல்லைக் கோடு பற்றிப் பேச்சு நடத்தத் தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் முன்வைத்த யோசனையையும் திருவாட்டி கிம் நிராகரித்தார்.

எல்லையை நிரந்தரமாக மூடுவதற்காகவே அங்கு பியோங்யாங் பாதுகாப்புக் கட்டமைப்புகளை அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்