Skip to main content
ஒலிம்பிக்கை குறிவைக்கும் வடகொரியா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஒலிம்பிக்கை குறிவைக்கும் வடகொரியா

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக்கை குறிவைக்கும் வடகொரியா

REUTERS/Issei Kato

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 26 Sep 2026 03:02PM புதுப்பிப்பு : 26 Sep 2026 03:03PM

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கிற்குத் திரும்புகிறது வடகொரியா.

2028 லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கில் அதன் பளுதூக்கும் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக ஆசிய விளையாட்டுகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

ஜப்பானில் இதுவரை ஆறு போட்டிகள் நடந்துள்ளன.

அவற்றில் வடகொரியா நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்றுள்ளது.

அதோடு ஏழு உலகச் சாதனைகளையும் படைத்துள்ளது.

மகளிர் 49 கிலோ பிரிவில் ரி சோங் கும் (Ri Song Gum) தங்கம் வென்றார்.

அவர் மட்டும் மூன்று உலகச் சாதனைகளைப் படைத்தார்.

ஓ குவாங் ஓக் (Oh Kwang Ok) மேலும் மூன்று உலகச் சாதனைகளை முறியடித்தார்.

2028 ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு என்றார் அவர்.

வடகொரியா கடைசியாக 2016 ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

கோவிட் காலத்தில் தோக்கியோ ஒலிம்பிக்கை அது தவிர்த்தது.

பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெறவும் அதற்குப் போதிய நேரமில்லை.

ஆனால் பளுதூக்குதலில் அதன் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

2023 ஆசிய விளையாட்டுகளில் ஆறு தங்கங்களை வடகொரியா வென்றது.

அப்போது ஆறு உலகச் சாதனைகளையும் அது படைத்தது.

இப்போது அதன் பார்வை லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் தங்கத்தின் மீது உள்ளது.  

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்