வடகொரியாவில் பறந்த ஆளில்லா வானூர்திகள்
This audio is generated by an AI tool.
வடகொரியத் தலைவரின் சகோதரி கிம் யோ ஜோங் (Kim Jong Un), தம் நாட்டு ஆகாயவெளியில் அத்துமீறிப் பறந்த ஆளில்லா வானூர்திகள் குறித்து சோல் விசாரணை நடத்தவேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் சம்பவம் நடந்தது.
பியோங்யாங்கைச் சினமூட்டும் எவ்வித எண்ணமும் சோலுக்கு இல்லை என்பதைத் தென்கொரிய அதிபர் அலுவலகம் மறு உறுதிப்படுத்தியது.
அத்துமீறி வடகொரிய வான்வெளிக்குள் நுழைந்ததாகச் சொல்லப்படும் ஆளில்லா வானூர்திகள் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், விரைவில் விசாரணை முடிவுகள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றும் தென்கொரியா கூறியது.
அந்தச் சம்பவத்திற்கு யார் காரணம் என்று உறுதிசெய்யப்பட்டால் அது கொரியத் தீபகற்பத்தின் அமைதியைக் குலைக்கும் மிகக் கொடிய குற்றமாகப் பார்க்கப்படும் என்றார் தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் (Lee Jae Myung).
தென்கொரியா கொடுத்த விளக்கத்திற்குத் திருவாட்டி கிம் நன்றி தெரிவித்தார்.
என்றாலும் விரோதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மோசமான பின்விளைவுகள் இருக்குமென அவர் எச்சரித்தார்.