Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய - வடகொரிய உறவு வலுவடைகிறது

வாசிப்புநேரம் -
ரஷ்ய - வடகொரிய உறவு வலுவடைகிறது

(படம்: Korean Central News Agency/Korea News Service via AP)

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) ரஷ்யாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டில் உள்ள அம்சங்கள் அனைத்தையும் விரிவுபடுத்த உறுதிதெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் இருதரப்புத் தற்காப்பு உடன்பாடும் ஒன்று.

திரு கிம் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளை மீண்டும் சாடினார்.

உக்ரேனுக்கு எதிராகத் தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு ரஷ்யாவிற்கு உரிமை உண்டு என்றார் அவர்.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தலையிட்டதால்தான் உக்ரேன் தொலைதூர ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று அவர் சொன்னார்.

ரஷ்ய தற்காப்பு அமைச்சர் ஆண்டிரே பெலோசோவ்வைச் (Andrei Belousov) சந்தித்தபோது திரு கிம் அந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்