Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மூக்குத்தியால் விபரீதம்....நாற்காலியோடு தீயணைப்பு நிலையத்துக்குச் சென்ற பெண்

வாசிப்புநேரம் -
மூக்குத்தியால் விபரீதம்....நாற்காலியோடு தீயணைப்பு நிலையத்துக்குச் சென்ற பெண்

pixabay

இந்தோனேசியாவில் ஒரு பெண் விளையாட்டாகச் செய்த காரியம் வினையில் போய் முடிந்தது.

நாற்காலியின் முதுகு சாய்கும் இடத்திலிருந்த ஓட்டைக்குள் மூக்கை நுழைத்திருக்கிறார் அந்தப் பெண். விளைவு, மூக்குத்தி மாட்டிக்கொண்டது.

செய்வதறியாமல் தவித்த அப்பெண்ணை அவரது அலுவலக நண்பர்கள் நாற்காலியுடன் சேர்த்தே தீயணைப்பு நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கிருந்தவர்கள் பெண்ணின் மூக்குத்தியை ஓட்டையிலிருந்து வெளியே எடுத்தனர். அதற்கு 10 நிமிடம் தேவைப்பட்டது.

மேற்கு ஜாவா மாநிலத் தலைநகர் பண்டுங்கில் (Bandung) அந்தச் சம்பவம் நடந்தது.

அந்தச் சம்பவத்தைச் சிலர் வேடிக்கையாகப் பார்த்தாலும் பலர் அந்தப் பெண் விளையாட்டாகச் செய்த செயலைக் கண்டித்தனர்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்