Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அணுச்சக்தி மோதல் அபாயம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது - ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர்

வாசிப்புநேரம் -

உலகளவில் அணுக்சக்தி மோதல் இடம்பெறும் ஆபத்து அதிகமாகியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) சுட்டியுள்ளார். 

பல ஆண்டுகளுக்குப் பின் அத்தகைய ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அணுவாயுதங்களைக் கொண்ட நாடுகள் அவற்றை முதலில் பயன்படுத்தக்கூடாது என உறுதியளிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அணுமின் ஆலையைத் தாக்குவது தற்கொலைபோன்றது என்று திரு. குட்டரெஸ் குறிப்பிட்டார். ரஷ்யா ஐரோப்பாவின் ஆகப் பெரிய அணுமின் ஆலையான உக்ரேனின் ஸபொரிஸியா மீது தாக்குதல் நடத்தியதைப் பற்றி அவர் அவ்வாறு சொன்னார். 

77 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானின் ஹிரோஷிமாவில் உலகின்  முதல் அணுக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அங்கு நடத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் திரு. குட்டரெஸ் கலந்துகொண்டார்.

அதன் பிறகு தோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் பேசினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்