Skip to main content
உலகின் அணுவாயுதங்கள் எங்கிருக்கின்றன? யாரிடம் இருக்கின்றன?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகின் அணுவாயுதங்கள் எங்கிருக்கின்றன? யாரிடம் இருக்கின்றன?

வாசிப்புநேரம் -
இஸ்ரேல், ஈரான் இடையிலான போரால் அணுவாயுதம் குறித்த பேச்சு அதிகரித்துள்ளது.

யாரிடம் எவ்வளவு அணுவாயுதங்கள் உள்ளன, அவை எங்கே உள்ளன? இப்படிப் பல கேள்விகள்.

அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 9 நாடுகளிடம் அணுவாயுதங்கள் இருப்பதாகச் சொல்கிறது The Washington Post இணையத்தளம்.

--உலகில் சுமார் 12,240 அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கெடுபிடிப் போரின் (Cold War) உச்சத்தில் அந்த எண்ணிக்கை 70,000ஆக இருந்தது.

-- அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகின் 87 விழுக்காட்டு அணுவாயுதங்களுக்குச் சொந்தக்காரர்கள்.

-- பிரிட்டன், பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் எஞ்சிய 13 விழுக்காட்டை வைத்திருக்கின்றன.

-- மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் மட்டுமே அணுவாயுதம் வைத்திருக்கும் நாடு. அங்கே சுமார் 90 அணுவாயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

-- ஒவ்வொரு நாட்டிடமும் எவ்வளவு அணுவாயுதங்கள் உள்ளன, அவை எங்கே உள்ளன என்பது ரகசியமாக வைத்துக்கொள்ளப்படுகிறது.

-- 6 நாடுகள் பிறநாட்டின் அணுவாயுதங்களைப் பாதுகாத்து வருகின்றன. இத்தாலி, ஜெர்மனி உட்பட5 நாடுகள் அமெரிக்காவுக்காக அதைச் செய்கின்றன. இது வெளிப்படையாகத் தெரியும். ஒரு நாடு ரஷ்யாவுக்காக அதைச் செய்கிறது.

-- ரஷ்யாவின் அணுவாயுதங்கள் பெலருஸில் (Belarus) உள்ளன எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் உறுதிப்படுத்த போதிய சான்றுகள் இல்லை.

அணுவாயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், பிற நாடுகள் பயந்து போர் தொடுக்கமாட்டா என்ற கூற்று இன்றைய காலக்கட்டத்துக்குப் பொருந்தாது என்று The Washington Post செய்தியிடம் பேசிய நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், தொடரும் போர் சூழலால் புதுவித ஆயுதப் போட்டி அதிகரிக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஆதாரம் : Others/Washington Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்