"ஆப்கானிஸ்தான் மக்களில் 85 விழுக்காட்டினர் வறுமையில் வாடுகின்றனர்"
வாசிப்புநேரம் -
(படம்: unsplash)
ஆப்கானிஸ்தானில் சுமார் 34 மில்லியன் பேர் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வறுமைக்கு ஆளானோர் விகிதம் சுமார் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களில் 85 விழுக்காட்டினர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்கப் படையினர் மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் நிர்வாகத்தை ஏற்றனர்.
அந்நாட்டின் பொருளியல் நிலைகுலையும் சூழலில், ஊழியர்களின் ஊதியத்துக்கும் நடைமுறைச் செலவுக்கும் ஐக்கிய நாட்டு நிறுவனம் பெருமளவு நிதி வழங்குகிறது.
நலிவடைந்திருக்கும் பொருளியலுக்கு அது உரம் சேர்க்கிறது.
2021ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை ஆப்கானிஸ்தானுக்குச் சுமார் 1.8 பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கச் சார்பற்ற வெளிநாட்டுத் தொண்டு அமைப்புகளில் பெண்கள் வேலை செய்யத் தலிபான்கள் தடை விதித்தனர். அது நீக்கப்படாவிட்டால் அடுத்த மாதமே தனது பணிகளை முடக்கத் தயாராவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தலிபான்களின் அடக்குமுறையால் ஐக்கிய நாட்டு நிறுவனம் அதன் பணிகளை நிறுத்திக்கொண்டால் நிதியுதவி மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானியப் பொருளியலுக்கான வாழ்வாதாரமும் அறுந்துபோகும்.