900 அல்ல 116... இபோலா எண்ணிக்கை குறைந்தது
கோப்புப்படம்: REUTERS/Gradel Muyisa Mumbere
இபோலா கிருமி தொற்றியதாகச் சந்தேகிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நோய்த்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் எண்ணிக்கை 116.
கடந்த வாரம் ஏறக்குறைய 900 என்றிருந்த நிலையோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
நோயாளிகளில் பலர் வேறு நோயால் பாதிப்பட்டது தெரியவந்ததாக அது கூறியது.
அந்த நோய்கள் இபோலா போன்ற அறிகுறிகளைக் கொண்டிருந்ததாக நிறுவனம் சொன்னது.
காங்கோவில் 344 பேருக்கு இபோலா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
60 பேர் மாண்டனர்.
அண்டை நாடான உகாண்டாவில் 15 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஒருவர் உயிரிழந்தார்.
தற்போதைய நோய்ப்பரவலுக்கு புண்டிபூஜோ (Bundibugyo) நச்சுக்கிருமி காரணமாக உள்ளது.
இதற்கான தடுப்பு மருந்தோ அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ இப்போதைக்கு இல்லை.