உலகம் trending
Nutella - விண்வெளியில் விளம்பரமா?
படம்: X/@iamtobi
This audio is generated by an AI tool.
Artemis விண்வெளிப் பயணத்தின்போது விண்கலத்தில் நட்டெல்லா (Nutella) ஜாடி மிதந்ததால் இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் இணைய நேரலையில் வந்தனர்.
அதைப் பார்த்த இணையவாசிகள் நட்டெல்லா (Nutella) ஜாடி மிதந்து சென்றதைக் கவனித்தனர்.
அது வரலாற்றிலேயே ஆகச் சிறந்த இலவச விளம்பரம் என்று சில இணையவாசிகள் கூறினர்.
நட்டெல்லா நிறுவனம் சம்பவத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது.
நட்டெல்லா அதிகத் தூரத்தைக் கடந்ததை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக நிறுவனம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டது.
இணையவாசிகள் சிலர் நட்டெல்லாவை விளம்பரப்படுத்தவே NASA அந்தக் காட்சியை அமைத்ததாகச் சந்தேகித்தனர்.
NASA வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
விண்வெளி வீரர்களின் உணவை NASA தேர்ந்தெடுப்பதில்லை.
நட்டெல்லா அல்லது மற்றெந்த உணவுப் பொருளையும் விளம்பரப்படுத்துவது நோக்கமல்ல என்று Futurism செய்தித்தளத்திடம் NASA தெரிவித்தது.