Skip to main content
காலையில் எழுந்ததும் முதல் 2 மணி நேரம் ஏன் முக்கியம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

காலையில் எழுந்ததும் முதல் 2 மணி நேரம் ஏன் முக்கியம்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

காலையில் எழுந்ததும் முதலில் என்ன செய்கிறோம்? என்ன சாப்பிடுகிறோம்? என்பது மிகவும் முக்கியம். அதனைப் பொறுத்தே அன்றைய நாள் அமையும் என்கிறார் இந்திய ஊட்டச்சத்து நிபுணர் தீப்சிகா ஜெயின் (Deepsikha Jain). முதல் 2 மணி நேரத்தைச் சரியாகச் செலவிட வேண்டும் என்கிறார் அவர். எப்படி? ⏰காலை 7 மணி: எழுவது; . தினமும் ஒரே சீரான நேரத்தில் எழுவதை முடிந்தவரை உறுதிப்படுத்த வேண்டும். ⏰காலை 7:10 மணி: தண்ணீர் அருந்தவும். இது உடலையும், நுண்ணுயிரிகளையும் விழிப்படையச் செய்து, குடல் இயக்கம், செரிமானத்தை மேம்படுத்த உதவும். ⏰காலை 7:15 மணி: இது உங்கள் நாளின் மிகவும் சக்திவாய்ந்த நேரம். சூரிய ஒளியில் அமர்வதை உறுதிப்படுத்துங்கள். இது கார்டிசோல் (cortisol) அளவை உயர்த்தி, நாள் முழுவதும் உங்களை அதிக உற்சாகத்துடன் வைத்திருக்கும். ⏰காலை 7:30 மணி: சிறிது காப்பி குடிக்கலாம். ⏰காலை 7:45 மணி: வீட்டுக்கு வெளியே உடற்பயிற்சி செய்யவும். ⏰காலை 8:45 மணி: ஒரு மணிநேர உடற்பயிற்சிக்குப் பிறகு, வீட்டிற்கு வந்து சில சுவாசப் பயிற்சிகளையும் தியானமும் செய்யலாம். இது நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்தும். காலை 9:00 மணி: மிதமான நார்ச்சத்தும் (fiber), அதிகப் புரதச்சத்தும் (protein) கொண்ட காலை உணவைச் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலின் ரத்த சர்க்கரையைச் சீராக்கி உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். இது பொதுவான அட்டவணை என்பதால், அவரவர் உடல் தேவைக்கு ஏற்ப மருத்துவரிடம் உகந்த ஆலோசனை பெற்று அதன்படி பின்பற்றலாம் என்றார் அவர். தமது Instagram பதிவில் தீப்சிகா இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
 

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்