Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூசிலந்துப் பிரதமருக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
நியூசிலந்துப் பிரதமருக்குக் கிருமித்தொற்று

படம்: AFP/Marty MELVILLE

நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டனுக்கு (Jacinda Ardern) கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் மிதமான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும்  7 நாளுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வார் என்றும் பிரதமர் அலுவலகம் சொன்னது.

கணவர் கிருமித்தொற்றுக்கு ஆளானதால் திருவாட்டி ஆர்டன் ஏற்கனவே கடந்த ஞாயிறுக்கிழமையிலிருந்து (8 மே) தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

நியூசிலந்தில் அடுத்த வாரம் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான திட்டமும் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டமும் அறிவிக்கப்படவுள்ளது.

அவை குறித்த நாடாளுமன்ற அமர்வுகளில் திருவாட்டி ஆர்டன் நேரடியாகப் பங்கேற்கமுடியாது.

- AFP/nh

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa