அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத் தாக்குதல் - வலசாரிக் கிளர்ச்சி அமைப்பின் தலைவருக்கு 18 ஆண்டுச் சிறை
வாசிப்புநேரம் -

(படம்:Susan Walsh/AP)
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது ஈராண்டுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, வலசாரி Oath Keepers கிளர்ச்சி அமைப்பின் தலைவருக்குப் 18 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படுள்ளது.
தாக்குதலின் தொடர்பில் 1,000 க்கும் அதிகமானோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
கிளர்ச்சி அமைப்பின் தலைவர் ஸ்டுவர்ட் ரோட்ஸுக்கு (Stewart Rhodes) ஆயுதமேந்திய தமது குழுவை, நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காகத் தண்டனை விதிக்கப்பட்டது.
திரு. ஜோ பைடன் (Joe Biden) அதிபர் பொறுப்பை ஏற்பதைத் தடுக்கத், தேவையிருந்தால் வன்முறையைப் பயன்படுத்தவும் ரோட்ஸ் தமது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை அந்தத் தாக்குதல்களின் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் அவருக்கான சிறைவாசம் ஆக நீளமானது.