Skip to main content
"அவர்களுக்கு வெட்கம் இல்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"அவர்களுக்கு வெட்கம் இல்லை" - இனவாதக் காணொளியைச் சாடிய ஒபாமா

வாசிப்புநேரம் -
"அவர்களுக்கு வெட்கம் இல்லை" - இனவாதக் காணொளியைச் சாடிய ஒபாமா
படம்: AFP/Mandel Ngan
அமெரிக்காவின் முன்னைய அதிபர் பராக் ஒபாமா, நாட்டின் அரசியல் கலந்துரையாடல்களைக் குறைகூறியிருக்கிறார்.

அவற்றில் ஈடுபடுவோருக்கு வெட்கமோ ஒழுக்கமோ இல்லை என்றார் அவர்.

அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் அண்மையில் காணொளி ஒன்றைப் பகிர்ந்தார்.

அதில் திரு ஒபாமாவும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் குரங்குகளைப்போல் சித்திரிக்கப்பட்டனர்.

அது குறித்து முதல்முறையாகக் கருத்துரைத்தார் திரு ஒபாமா.

திரு டிரம்ப்பைப் பெயர் சொல்லிக் குறிப்பிடாத அவர், அமெரிக்கர்களில் பெரும்பாலோருக்கு அத்தகைய நடத்தை மிகவும் கவலையளிப்பதாகச் சொன்னார்.

நேர்காணல் ஒன்றில் அந்த விவகாரம் பற்றித் திரு ஒபாமாவிடம் கேட்கப்பட்டது.

சமூக ஊடகத்திலும் தொலைக்காட்சியிலும் நடக்கும் கலந்துரையாடல் எல்லாம் அபத்தம் என்றும் திரு ஒபாமா கூறினார்.

அதில் ஈடுபடுவோரிடையே எந்த வெட்கமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.

அதிபர் பதவிக்கெனத் தனி ஒழுங்கும் மரியாதையும் உள்ளன.

அந்தத் தன்மை இப்போது மறைந்து விட்டதாகத் திரு ஒபாமா கூறினார்.

காணொளியால் இடைத்தவணைத் தேர்தலில் திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குப் பாதகம் ஏற்படலாம் என்று திரு ஒபாமா சொன்னார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்