Skip to main content
ஜெர்மனி வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொகை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜெர்மனி வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொகை - $35 மில்லியன்

வாசிப்புநேரம் -
ஜெர்மனி வங்கியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தொகை - $35 மில்லியன்
படம்: Police Gelsenkirchen via AFP
ஜெர்மனி வங்கிக்குள் ஓட்டைபோட்டுக் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு 35 மில்லியன் டாலர் (சுமார் 45 மில்லியன் வெள்ளி) என்று அந்நாட்டுக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கேல்சங்கேர்ஷன் (Gelsenkirchen) நகரில் Sparkasse வங்கியிலிருந்து ஒரு கும்பல் ரொக்கம், தங்கக் கட்டிகள், நகை முதலியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மிகவும் சாதுர்யமாகக் கொள்ளை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக வங்கி மூடப்பட்டிருந்த வாரயிறுதியில் கும்பல் கொள்ளையடித்ததாக நம்பப்படுகிறது.

கார் நிறுத்துமிடத்திலிருந்து வங்கியின் நிலத்தடிப் பாதுகாப்பு அறைக்குள் கும்பல் ஓட்டைபோட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பொருள்கள் வைக்கப்பட்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பெட்டிகள் சூறையாடப்பட்டன.

கண்காணிப்புக் கேமரா பதிவுகளில் முகமூடி அணிந்த சிலர் கார் நிறுத்துமிடத்திலிருந்து Audi RS 6 காரில் செல்வதைப் பார்க்கமுடிகிறது.

அது திருடப்பட்ட கார் என்று அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

விசாரணை தொடர்கிறது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்