Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாகிஸ்தானின் தாக்குதலால் ராணுவக் கட்டமைப்பில் பாதிப்பு இல்லை: இந்தியா

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானின் தாக்குதலால் தனது ராணுவ கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஆடம்பூர், சூரத், நக்ரொட்டா, தெரங்கியரி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்களும் தளவாடங்களும் சேதமடைந்துள்ளதாகப் பாகிஸ்தான் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறது என்று இந்திய ராணுவம் சொன்னது.

பாகிஸ்தான் அதன் துருப்பினரை எல்லைப்பகுதிக்கு அருகே அனுப்பி வருவதாக அது குறிப்பிட்டது.

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தயாராய் இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதேவேளை, தாக்குதலைக் கைவிட பாகிஸ்தான் தயார் என்றால் அதற்கும் ஒத்துழைக்கத் தயார் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்