Skip to main content
எண்ணெய் விலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

எண்ணெய் விலை - ஆசிய நாடுகள் அறிவிக்கும் உதவி

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆசிய நாடுகள் எண்ணெய் விலை ஏற்றத்தின் தாக்கத்திலிருந்து மக்களையும் நிறுவனங்களையும் பாதுகாக்க விரைந்து செயல்படுகின்றன.

தென் கொரியா 30 ஆண்டில் முதல் முறையாக உள்நாட்டில் எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பை விதித்துள்ளது.

சீனா டீசல், பெட்ரோல் ஆகியற்றின் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

பெரிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அந்த உத்தரவு.

உள்ளூர் மக்களின் தேவையை முதலில் நிறைவுசெய்யும்படி சீன அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

பாகிஸ்தான் இரண்டு வாரங்களுக்குப் பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தின் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மேலும் சில தீவிர நடவடிக்கைகளையும் அது எடுக்கிறது.

போரால் எண்ணெய் உற்பத்தியிலும் விநியோகத்திலும் பெரிய அளவில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

அதனால் எண்ணெய் விலை அதிகரித்தது.

போர் விரைவில் நின்றுவிடும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்த பிறகு எண்ணெய் விலை சற்று குறைந்தது.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்